ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வரும் 17-ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி50 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
இந்த ராக்கெட்டானது, தட்பவெப்ப நிலையை கவனத்தில் கொண்டு அன்று மாலை 3.41 மணியளவில் விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
https://twitter.com/isro/status/1337378428455022592?s=20
இது இந்தியாவின் 42வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. பி.எஸ்.எல்.வி. ராக்கெட் சி.எம்.எஸ்.-01 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை உடன் சுமந்து செல்லும்.
இந்திய பகுதி, அந்தமான் மற்றும் நிகோபர், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நீட்டிக்கப்பட்ட-சி பேண்ட் அலைக்கற்றை சேவைகளை வழங்குவதற்கான நோக்கில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
Leave your comments here...