பிறவி கலைஞருக்கு பாராட்டு .!

Scroll Down To Discover

காரைக்குடியில் பிறவி கலைஞரான ஏகாம்பர ஆசாரிக்கு பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.

காரைக்குடியைச் சேர்ந்தவர் ஏகாம்பர ஆசாரி. காரைக்குடி கொப்புடையம்மன் கோவில், அயோத்தி கோவில் போன்றவற்றுக்கு தேர் செய்து புகழ் பெற்றவர்.பல வெளிநாடுகளுக்கும் பல்வேறு தேர் உட்பட கோவில் வாகனங்கள் செய்து அனுப்பி வருகிறார். 

தற்பொழுது கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு மிகப்பெரிய வெள்ளி வாகனம் செய்து அதனை அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில்  சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மாதவன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின்  முன்னாள் நூலக அலுவலர் வீரராகவன், பத்திரப்பதிவு துறையின் முன்னாள் மாவட்ட பதிவாளர்  சர்புதீன், அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கோவிந்தராமானுஜம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.இந்நிகழ்வில் சாதிக் , கண்ணபிரான், நாகசுந்தரம், சிற்றரசு, லெ .சொக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.