பிரபல பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை காலமானார்.!

Scroll Down To Discover

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம்பிள்ளை வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 96.

பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் பகுதியில் வசித்தவர் ரத்தினம்பிள்ளை. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். 1929-ல் பிறந்த ரத்தினம், 1959-ல் மருத்துவர் பணியைத் தொடங்கினார். அப்போது, ரூ.2-க்கு மருத்துவம் பார்த்தார். பின்னர், ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்தார். இதனால் பட்டுக்கோட்டை பகுதியில் பத்து ரூபாய் மருத்துவர் என மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கடைசி வரை கட்டணத்தை உயர்த்தாமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில், வயதுமூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் மருத்துவர் ரத்தினம் இன்று உயிரிழந்தார். அவரது உடல் நாளை (ஜூன் 8) அடக்கம் செய்யப்படவுள்ளது. மருத்துவர் ரத்தினத்தின் மறைவு பட்டுக்கோட்டை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.