ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்திற்கும் குஜராத்தின் காந்திநகருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளார். புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாளின் ஓராண்டுகால விழாவை அன்று காலை 11 மணிக்கு பீமாவரத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைப்பார்.
அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். 1897ம் ஆண்டு ஜூலை 4 அன்று பிறந்த அல்லூரி சீதாராம ராஜூ, கிழக்குத் தொடர்ச்சி மலை பிராந்தியத்தின் பழங்குடி சமூகத்தினரின் நலன்களை பாதுகாக்க பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்திற்காக நினைவுகூரப்படுகிறார்.
புதிய இந்தியாவின் தொழில்நுட்ப பத்தாண்டை ஊக்கப்படுத்துதல் என்பதை மையப்பொருளாகக் கொண்ட டிஜிட்டல் இந்தியா வாரம் 2022-ஐ பிரதமர் தொடங்கிவைப்பார். இந்திய மொழிகளில் உள்ளடக்க உருவாக்கத்திற்கு உதவி செய்யவும், குரல் அடிப்படையிலான அணுகல் உட்பட இந்திய மொழிகளில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் இணையதளத்தை எளிதாக அணுக வகை செய்யும் ‘டிஜிட்டல் இந்தியா பாஷினி’-யை, பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
‘டிஜிட்டல் இந்தியா ஜெனசிஸ்’ (புதிய கண்டுபிடிப்பு தொழில்களுக்கான அடுத்த தலைமுறை ஆதரவு) பிரதமரால் தொடங்கிவைக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு மொத்தம் ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ‘இந்தியாஸ்டாக்.குளோபல்’-ஐயும், பிரதமர் தொடங்கிவைப்பார். ஆதார், யுபிஐ, டிஜிலாக்கர், கோவின் தடுப்பூசி தளம், அரசு இ-சந்தை, தீக்ஷா தளம், ஆயுஷ்மான் பாரத், டிஜிட்டல் சுகாதார இயக்கம் போன்ற இந்தியாஸ்டாக் மூலம் அமலாக்கப்பட்ட முக்கியத் திட்டங்கள் உலகளாவிய களஞ்சியமாகும்.
அரசு திட்டங்களை எளிதில் கண்டறிவதற்கான தளமாக ‘மைஸ்கீம்’ என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் அர்ப்பணிப்பார். தங்களுக்கு பொருத்தமான திட்டங்களை பயனாளிகள் ஒரே இடத்தில் கண்டறிவது இதன் நோக்கமாகும். ‘மேரி பெஹச்சான்-ஐயும் நாட்டு மக்களுக்கு அவர் அர்ப்பணிப்பார்.
Leave your comments here...