பிரதமர் மோடியின் முகம் – தொடர்ந்து 5-வது முறையாக மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி..!

Scroll Down To Discover

மத்திய பிரதேச சட்டசபையில் உள்ள 230 இடங்களுக்கு நவம்பர் 17 அன்று தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்களிக்க தகுதியுள்ள மக்களில் சுமார் 77 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

சட்டசபை தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகியது.இதில் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையான 116க்கும் மேலாக 160 இடங்களை கடந்து பா.ஜ.க. மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மீண்டும் 5-வது முறையாக மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்க சாதனை.ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே நிலவுவதாகவும் அதன் பயன் காங்கிரஸ் கட்சிக்கு செல்லும் என்றும் பல அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் அவை அனைத்தையும் பொய்யாக்கி விட்டது.

ம.பி.யில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக அதிகளவில் பெண்கள் வாக்களித்ததாகவும் அதற்கு காரணம் “லாட்லி பெஹ்னா யோஜனா” (ladli behna yojana) எனும் திட்டம்தான் என சில அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் பதவி மீண்டும் சிவராஜ் சிங் சவுகானுக்கு கிடைக்குமா..?

முதலமைச்சர் பதவி மீண்டும் சிவராஜ் சிங் சவுகானுக்கு கிடைக்குமா அல்லது புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  பாஜகவில் முதல்வர் பதவிக்கு ஏற்கனவே பலரின் பெயர்கள் பேசப்பட்டன.  தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கியமாக 5 பெயர்கள் பற்றி தீவிர விவாதம் நடந்து வருகிறது.  அதில் முதனமையானவர்  சிவராஜ் சிங் சவுகான். மூத்த பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகான் மத்தியப்பிரதேச முதல்வராக உள்ளார்.4 முறை முதல்வராக பதவியேற்றுள்ளார். 2018-ம் ஆண்டு இவருடைய தலைமையில் பாஜக தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆனால், 15 மாதங்களுக்குப் பிறகு காங்கிரஸில் கிளர்ச்சி ஏற்பட்டு பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இம்முறை தேர்தலில் சிவராஜ் சிங் சவுகானை பாஜக முன்னிலை வகிக்கவில்லை.

மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் முகத்திற்குப் பதிலாக பிரதமர் மோடியின் பெயரில் பிரச்சாரம் செய்தது, பிராந்திய தலைவர்களின் சிறப்பான செயல்பாடு என பல காரணங்களை உள்ளடக்கிய பாஜகவின் கலவையான உத்திகள் பலனளித்தது போல் தெரிகிறது.  சிவராஜ் சிங் சவுகானின் லாட்லி லக்ஷ்மி யோஜனா திட்டமும் இந்தத் தேர்தலில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இது தவிர,  காங்கிரசுக்குள் ஏற்பட்ட கோஷ்டி பூசலின் விளைவுகளும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர சிவராஜ் சவுகான் போட்ட திட்டங்கள்:  

லாட்லி பெஹ்னா யோஜனா” திட்டம் என்றால் என்ன? ம.பி.யில் 2023 மார்ச் 5 அன்று இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்மணிகள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் மாநில அரசாங்கத்தினால் ரூ.1000 வரவு வைக்கப்படும். இதன் நோக்கம். பெண்கள் தங்கள் உடல்நலம் மற்றும் தங்கள் குழந்தைகளின் உடல்நலத்தை மேம்படுத்த பால், கனி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க உதவுவதுதான்.

இத்திட்டத்திற்கு அடுத்த சில வருடங்களில் ரூ.60 ஆயிரம் கோடி வரை செலவிட போவதாக ம.பி. அரசு கூறியது. இத்திட்டத்திற்கான உதவி தொகை மேலும் உயர்த்தப்படலாம் என தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியினர் தொடர்ந்து அறிவித்துள்ளதால், அக்கட்சியின் வெற்றியில் பெண்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாநிலத்தில் காங்கிரஸின் பாரம்பரிய வாக்காளர்களாகக் கருதப்படும் எஸ்சி-எஸ்டியினரிடையே கூட பாஜகவால் கால் பதிக்க முடிந்தது, இதற்குக் காரணம் லட்லி பிராமின் யோஜனா என்று கூறப்படுகிறது.

மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பிரபலத்தை கருத்தில் கொண்டு,  கட்சி அவரின் முதல்வர் பதவியை பறிக்கும் என்று தெரியவில்லை.  ஆனால் மத்திய தலைமையுடனான அவரது உறவுகள் மோசமடைந்தால்,  அவரது ஐந்தாவது பதவிக்காலம் அவருக்கு ஒரு பிரச்சனையாக மாறும் என கூறப்படுகிறது.

மறுபக்கம் பாஜக,  2024 லோக்சபா தேர்தல் வரை சிவராஜ் சிங் சவுகானை முதல்வராக வைத்திருக்க வாய்ப்புள்ளது.