பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் இமெயிலால் பரபரப்பு – பாதுகாப்பை பலப்படுத்த எஸ்பிஜி-க்கு உத்தரவு..!

Scroll Down To Discover

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு இமெயில் ஒன்று அனுப்பப்பட்டுள்ள விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி இரவு 1.34 மணிக்கு என்.ஐ.ஏ.வின் மும்பை அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு, ylalwani12345@gmail.com என்ற முகவரியில் இருந்து “நரேந்திர மோடியை கொல்லுங்கள் (Kill Narendra Modi)” என்று மிரட்டல் விடுக்கும் இமெயில் அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரதமரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என எஸ்.பி.ஜி., பாதுகாப்பு படைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.இமெயில் குறித்து விசாரிக்க ‘ரா’, உளவுத்துறை உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில், வெளிநாட்டிலிருந்து இந்த மிரட்டல் மெயில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.