பிரதமருக்கான அதிநவீன போயிங் 777 அதிநவீன விமானம் இந்தியா வருகிறது..!

Scroll Down To Discover

இந்தியாவில் தற்போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகிய மிக முக்கியமான பிரமுகர்கள் ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த விமானங்கள் ஏர் இந்தியா ஒன் என்று அழைக்கப்படுகிறது.இந்த நிலையில் நாட்டின் வி.வி.ஐ.பி.க்கள் பயன்பாட்டுக்காக 2 ஜம்போ விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ரூ.1,422 கோடியே 99 லட்சத்து 36 ஆயிரம் ( 190 மில்லியன் அமெரிக்க டாலர் ) மதிப்பில் 2 போயிங் 777 விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் இந்தியாவுக்கான முதல் போயிங் 777 விமானம் தற்போது தயாராகி விட்டது. இந்த விமானத்தை பெறுவதற்காக ஏர் இந்திய அதிகாரிகள் தற்போது அமெரிக்கா சென்றுள்ளனர். மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் உடன் சென்று உள்ளனர்.இந்த போயிங் 777 விமானம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளை கொண்டது என்பது சிறப்பு அம்சமாகும்.