பிரதமரின், சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் (PM-FME), திறன் மேம்பாட்டு பயிற்சியை மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், காணொலி காட்சி மூலம் நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
மேலும், ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு பற்றிய விவரங்கள் அடங்கிய டிஜிட்டல் வரைபடத்தையும் அவர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் திரு ரமேஷ்வர் தேலியும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது: இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியுடன் உள்ளார். உள்நாட்டு தயாரிப்பு, உள்நாட்டு சந்தை மற்றும் உள்நாட்டு விநியோக சங்கிலி ஆகியவைதான் முன்னோக்கி செல்லும் வழி.
திறன் மேம்பாடு ஒரு முக்கியமான அம்சம். இத்திட்டம் உணவுப் பதப்படுத்துதல் தொழிலில் ஈடுபடுவோர், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுறவு அமைப்புகள், இத்துறையில் தொடர்புடைய பிற தொழிலாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. சிறு தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதில் இந்த நாள் புதிய முயற்சியின் தொடக்கம்.
Leave your comments here...