பிரதமரின் தாய்மை போற்றுவோம் திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள்..!

Scroll Down To Discover

மத்திய அரசு உதவியுடன் பிரதமரின் தாய்மை போற்றுவோம் திட்டம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் அமலாக்கப்படுகிறது.

இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது. மத்திய அல்லது மாநில அரசுகளில் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் அல்லது இதே போன்ற பயன்களை வேறு ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பெறுபவர்கள் இந்த திட்டத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ளனர்.

25.01.2022 வரை இந்த திட்டத்தின் கீழ் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 2,58,07,111 பெண்கள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு மொத்தம் ரூ.9,791.28 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12,86,906 பயனாளிகளுக்கு ரூ.356.56 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பயனாளிகள் எண்ணிக்கை 26,042 ஆகும். இவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.11.37 கோடி.

மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி இதனை தெரிவித்துள்ளார்.