நாடாளுமன்றத்தின் மக்ககளவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு மேலதிகமாக, 1 கோடி டெபாசிட் இல்லா சமையல் எரிவாயு இணைப்புகளை நாடு முழுவதும் வழங்குவதற்காக உஜ்வாலா 2.0-ஐ 2021 ஆகஸ்ட் 10-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
உஜ்வாலா 2.0-ன் கீழ், டெபாசிட் இல்லா சமையல் எரிவாயு இணைப்பு, இலவச முதல் உருளை மற்றும் அடுப்பு ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
உஜ்வாலா 2.0-ன் கீழ் 2021 நவம்பர் 28 வரை நாடு முழுவதும் 78.98 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன. தமிழகத்தில் மட்டும் 1,68,313 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
Leave your comments here...