பிப்.11-ல் தை அமாவாசை : பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது புண்ணியம்.!

Scroll Down To Discover

வருகிற பிப். 11-ம் தேதி வியாழக்கிழமை தை அமாவாசையையொட்டி, பிதுர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் நல்லது.
ஆலயங்களிலிலும், நதிக்கரைகளிலும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாம்.

கொரோனா காலம் என்பதால், நதிக்கரைகளில் கூட்டம் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க விரும்புகின்றனராம். மேலும் பெரிய கோயில்களில் தை அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றி சிறிய கோயில்களில் மட்டும் தர்ப்பணம் செய்து வைக்கப்படுமாம்.

தை அமாவாசை தர்ப்பணம்: மதுரை யாணைக்குழாய் மாரியம்மன் ஆலயத்தில் தை அமாவாசையையொட்டி, 11.02.21. வியாழக்கிழமை காலை 6.45…7.15….மணி வரை தர்ப்பணம் செய்து வைக்கப்படும். தர்ப்பணத்துக்கு வருபவர்கள் தாம்பாளம், டம்ளர், கறுப்பு எள் பாக்கெட், இரண்டு வாழைப்பழம் கொண்டு வரவேண்டும். இதேபோல், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் காலை 7.30…மணி வரை 8…மணி வரையிலும், மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் ஞானசித்தி விநாயகர் ஆலயத்தில் தர்ப்பணம், காலை 8.30…மணி முதல் காலை 9.10…மணி வரையிலும், மதுரை ஆவின் பாலகம், பால விநாயகர் ஆலயத்தில் காலை 9.30…மணி முதல் காலை 10…மணி வரையிலும், மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் காலை 10…மணி முதல் 10.20..மணி வரையிலும், தர்ப்பணம் செய்து வைக்கப்படும்.
மேலும் தொடர்புக்கு, 9942840069, 8760919188.