பிட்காயினுக்கு ஆதரவான ட்வீட் – ஹேக் செய்யப்பட்ட பிரதமர் மோடி ட்விட்டர் கணக்கு…!

Scroll Down To Discover

பிரதமர் மோடியின் டவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் டவிட்டர் பக்கம் PM @narendramodi என்ற பெயரில் உள்ளது.

இதில் பல மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட டவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டது. பிரதமர் மோடியின் டவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் டவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக ஹேக்கர்கள் குறிப்பிட்டு இருந்தனர். டவிட்டர் நிறுவனத்திடம் உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு பிரதமரின் டவிட்டர் கணக்கு மீட்க்கப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.