பிசிஆர்ஏ-யின் எரிபொருள் சேமிப்பு குறித்து சாக்ஷம்2020 மகா பிரச்சார இயக்கத்தை பெட்ரோலிய அமைச்சகத்தின் செயலாளர் துவங்கி வைத்தார்…!

Scroll Down To Discover

பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஆதரவிலான பெட்ரோலிய சேமிப்பு, ஆராய்ச்சி சங்கத்தின் மூலம் ஆண்டுதோறும் நடைபெறும் ஒருமாதகால சாக்ஷம் என்ற எரிபொருள் சேமிப்பு குறித்த மகா பிரச்சார இயக்கத்தைப் பெட்ரோலிய அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம் எம் குட்டி இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.

பெட்ரோலியப் பொருட்கள் நமது நாட்டுக்கு   மிகவும் முக்கியம் என்பதைத் தமது உரையில் வலியுறுத்திய அவர், எரிபொருள் சேமிப்புக்கான செயல்பாடுகளின்  அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். பொதுமக்களையும் பல்வேறு செயல்களில் ஈடுபடுத்தும் சாக்ஷம் போன்ற நிகழ்ச்சிகளின் முக்கியத்துவம் பற்றியும் அவர் கூறினார். வளர்ச்சியும், வாழ்க்கைத் தர உயர்வும், இந்தியாவில் எரிபொருள் தேவையை அதிகரித்துள்ளது என்றும் இதனால் 2020 மத்தியில், உலக எரிபொருள் தேவைக்கான வளர்ச்சியில், 25 சதவீதம் இந்தியாவுடையதாக  இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

https://twitter.com/PetroleumMin/status/1217761044803620865?s=20

இந்தியாவின் தற்போதைய கச்சா எண்ணெய் தேவையில்  83 சதவீதம் இறக்குமதி  மூலம் சரி செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். எதிர்கால தேவைகளை ஈடுசெய்ய இயற்கை வளங்கள் பாதுகாப்புப் பற்றி வலுவான செய்தியை வழங்குவது சாக்ஷம் இயக்கத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.