சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்ட நகர நிலவரித் திட்ட வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தவர் மகாதேவன். இவர் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்களிடம், தவறுதலாக நடந்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டதாக புகார் எழுப்பப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில்,விசாக கமிட்டி அமைத்து, மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டதையடுத்து தனி வட்டாட்சியர் மகாதேவனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.
பெண் பாலியல் புகாரில் தனி வட்டாச்சியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது சிவகங்கை மாவட்ட வருவாய் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave your comments here...