மதுரை மாவட்டம் பாலமேட்டில், தேசீய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில், கிராமப்புற விவசாயிகளுக்கான, சிறுதானிய ஊட்டசத்து முகாமானது வியாழக்கிழமை நடைபெற்றது. கரீப் முன்பருவ சாகுபடி பற்றி விவசாயிகள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது.
பாலமேடு துணை வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்த இந்த முகாமுக்கு, வேளாண் வளர்ச்சி அலுவலர் வாசுகி தலைமை வகித்து, வேளாண் தொழில் நுட்பங்கள் பற்றியும், சான்று பெற்ற விதைகளையே, விவசாயிகள் பயன்படுத்த கேட்டுக் கொண்டார்.
https://youtu.be/IGywDwPj748
உணவு பாதுகாப்பு திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன், அலுவலர் ஆனந்தன், விதை சான்று உதவி இயக்குநர் குணசேகரன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் வேல்முருகன், உதவி இயக்குநர் அமினம்மாள், துணை இயக்குநர் அம்சவேணி, உதவி வேளாண் அலுவலர்கள் இந்திரஜித், ஈஸ்வரன், காதர்மொய்தீன், வட்டார உதவி தொழில் நுட்ப அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் சிறு தானியங்களான, கம்பு, மக்காச் சோளம், கேழ்வரகு, குதிரைவாலி, வரகு, மக்காச் சோளம், துவரை ஆகிய சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்கள், தரமான விதைகளை பயன்படுத்துதல், தொழில் நுட்பங்கள் பற்றி, விவசாயிகள் மத்தியில் எடுத்துரைத்தனர்.
இந்த முகாமில், பாலமேடு, ராஜாக்காபட்டி, முடுவார்பட்டி உள்ளிட்ட பத்து கிராமங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Leave your comments here...