பாரதி நகரில் பாஜக சார்பில் வீடுகள் தோறும் வேல் பூஜை..!

Scroll Down To Discover

தமிழகம் முழுவதும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தினை இழிவு படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும், போராட்டங்களும் நடத்தினர்.



இந்நிலையில் கருப்பர் கூட்டத்தை கண்டித்து கந்தர் சஷ்டி கவசத்தை பழித்து பேசிய கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்தும், மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை ஓங்க வலியுறுத்தியும் இன்று வீடு தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என பாஜக மாநில தலைவர் L.முருகன், மற்றும் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் அவர்களின் வேண்டுகோளின் படி, இன்று வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள பாரதி நகரில், மாநில செயற்குழு உறுப்பினர் செளதா மணி தலைமையில், செல்வ அழகப்பன், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க வேல் பூஜை நடைப்பெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தார்கள்.