பாஜக மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்குப்பதிவு..?

Scroll Down To Discover

பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் சென்னையில் தமிழக பா.ஜனதா சார்பில் கட்சியின் தலைவர் எல்.முருகன் சென்னை தி.நகரில் 70 அடிக்கு கேக் வெட்டியதுடன் சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்றார்.

இந்நிலையில் கொரோனா காலத்தில் தடையை மீறி அனுமதியின்றி குதிரை வண்டியில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பா.ஜனதா மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதனைத்தொடர்ந்து மாநில தலைவர் எல்.முருகன் உள்பட 100பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் மாம்பழம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.