பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்..

Scroll Down To Discover

கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகி கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறான வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அவர் மீது புகார்கள் குவிந்ததால் அவர் மீது குண்டர் சட்டம் உட்பட பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கல்யாணராமனை குண்டர்சட்டத்தில் கைது செய்ததை ரத்துசெய்யக்கோரி அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதில் பா.ஜ.க பிரமுகர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதி கூறினார்.