பாஜக நிர்வாகி காரில் கடத்தி கொலை – 6 பேரை கைது செய்தது தனிப்படை காவல்துறை.!

Scroll Down To Discover

திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலி கண்ணன் (வயது 52), பா.ஜ.க. நகர துணைத் தலைவரான இவர் நேற்று காலை ஊத்தங்கரை- சேலம் சாலையில் வேட்பாளம்பட்டி அருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பா.ஜ.க. பிரமுகர் கொலை சம்பவம் திருப்பத்தூர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், கலி கண்ணன் கொலை வழக்கு தொடர்பாக 6 பேரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஒசூர் பகுதியில் பதுங்கியிருந்த கொலையாளிகளை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் நடந்த போது அங்கிருந்த செல்போன் எண்ணை கொண்டு கொலையாளிகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.