தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.நிர்மல்குமார் டிவிட்டர் பக்கத்தில் திமுக கடந்த 60 வருடங்களுக்கு மேலாக திருவள்ளுவர் உண்மை வரலாற்றை மறைத்து தமிழர்களுக்கும், இந்துக்களுக்கும் பெரும் துரோகம் இழைத்துள்ளனர். அத்துடன் திமுகவினர் தமிழும், திருக்குறளையும் அவர்களின் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினார்களே தவிர மக்களிடம் கொண்டு சேர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை .
நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மொழியும், திருக்குறளையும் உலக அரங்கில் அணைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச்சென்று, தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
திருக்குறளை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்க்க பல முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம், இதன் தொடர்ச்சியாக ஆவின் பால் பைகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களுக்கு திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும், இது ஒரு சிறிய முயற்சி என்றாலும் இதை அமைச்சர் அவர்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருவதன் மூலம் இந்த கோரிக்கையை பரிசீலித்து செயல்வடிவம் கொடுக்குமாறு கேட்டு கொள்கிறோம் என தமிழக பாஜக தொழில்நுட்ப மாநில தலைவர் சி.டி.நிர்மல்குமார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கோரிக்கை விடுத்தார்.
மிக விரைவில் தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்#Aavin https://t.co/Ne7gncwtIS
— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) November 12, 2019
இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிக விரைவில் தமிழக முதல்வரின் ஒப்புதல் பெற்று ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிட்டு விநியோகிக்கப்படும் என டிவிட்டர் வலைதளத்தில் கூறியுள்ளார். ஏற்கெனவே திருக்குறளில் கூறிய உள்ளார்ந்த கருத்துக்களை பார்க்கும் போது, திருவள்ளுவர் இந்துமத பற்றாளராகத்தான் இருப்பார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...