பாஜக டூ ரஜினி : ரஜினி டூ பாஜக – பாஜகவில் மீண்டும் இணைந்தார் அர்ஜூன மூர்த்தி.!

Scroll Down To Discover

தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் அண்ணாமலையை சந்தித்து அர்ஜுனமூர்த்தி பாஜகவில் இணைந்தார்.

கடந்த 2020ல் நடிகர் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்த போது, வின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த கொங்கு மண்டலத்தை சேர்ந்த அர்ஜூன மூர்த்தியை தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். ரஜினி கட்சியில் பொறுப்பு ஏற்க இருந்ததால் பாஜகவிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார் அர்ஜூனமூர்த்தி. அச்சமயத்தில் ரஜினியின் கட்சியில் தலைமை பொறுப்பு இவரிடம் வழங்கப்பட்டதால் அனைவரின் கவனமும் இவர் மீது திரும்பியது.

இதன் பின்னர் ரஜினி உடல்நிலை பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக தான் அரசியலுக்கு வர போவதில்லை, அரசியல் கட்சியை தொடங்கப் போவதுமில்லை என அறிவித்தார். ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாலும் கொரோனா பாதிப்பு எளிதில் அவரை தாக்கும் வாய்ப்பிருப்பதாலும் மருத்துவர்களும் குடும்பத்தினரும் கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதை அடுத்து ரஜினி அவ்வாறு அறிவித்ததர். அதன் பின்னர் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். அவர் கட்சி தொடங்கியதற்கு ரஜினியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது தனது இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை பாஜகவில் இணைத்திருக்கிறார் அர்ஜூனமூர்த்தி. சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து தனது கட்சியை பாஜகவில் இணைத்திருக்கிறார் அர்ஜூன மூர்த்தி.

ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் அர்ஜூன மூர்த்தி பாஜகவில் இணையும் முன்னதாக திமுகவில் இருந்தவர். முரசொலி மாறனின் மறைவுக்கு பின்னர் தான் பாஜகவில் இணைந்திருக்கிறார். இவரின் மனைவி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பள்ளி தோழி என்பது குறிப்பிடத்தக்கது.