பாஜகவை புகார்… ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது

Scroll Down To Discover

குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விபத்து குறித்து பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக தவறான தகவல்கள், வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ரு போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவத்தில் முக்கிய தலைவர்களை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக புதுக்கோட்டையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ததாக கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், பாலசுப்பிரமணியன் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.