பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் – டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி கைது..!

Scroll Down To Discover

டி.ஆர்.டி.ஓ. அமைப்பில் பணியாற்றும் விஞ்ஞானி பிரதீப் குருல்கர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ரகசியங்களை பாகிஸ்தானின் உளவுதுறைக்கு அளித்ததாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படையான ( ATS) அமைப்பினால் புனேவில் கைது செய்யப்பட்டார்.

புனேயில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) பணியாற்றி வரும் விஞ்ஞானி ஒருவர், பாகிஸ்தான் ஏஜெண்டுகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் செய்யப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்டுடன், வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் மூலம் தொடர்பில் இருந்திருக்கலாம் என பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தன்னிடம் உள்ள ரகசியங்கள் எதிரி நாட்டுக்கு கிடைத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிந்திருந்தும், அந்த விஞ்ஞானி, தனது பதவியை தவறாக பயன்படுத்தி, தகவல்களை எதிரி நாட்டுக்கு வழங்கி உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மும்பை காலாசவுகியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில், அந்த விஞ்ஞானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.