பாகிஸ்தானில் இந்து கோவிலை அடித்து நொறுக்கி சராமாரி தாக்குதல்.!

Scroll Down To Discover

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்து கோவிலில், முஸ்லிம்கள் ஆவேச தாக்குதல் நடத்தியுள்ளனர். தீ வைக்கப்பட்டதால் கோவில் கடுமையாக சேதமடைந்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டத்தில் உள்ள போங்க் நகரில் 100க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூட்டமாக சென்று அங்குள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கோவில் சேதமடைந்துள்ளது.
https://twitter.com/KDSindhi/status/1422947305918017540?s=20
அங்கிருந்த கடவுள் சிலைகளையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். ஆக்ரோஷத்துடன் தாக்குதல் நடத்தியதால் போலீசாரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.போங்க் நகரில் உள்ள முஸ்லிம் வழிபாட்டு தலத்தில் உள்ள நூலகத்தில், 8 வயது இந்து சிறுவன் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள், ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 8 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சிலர் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். பாகிஸ்தான் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது வழக்கம். அந்த சிறுவன் அதற்கு நிகரான குற்றம் செய்தும் அந்த சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.