பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை உடைத்த பெண் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு..!

Scroll Down To Discover

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஜூபைர் பகுதியில் உள்ள ஒரு கடையில், புர்கா அணிந்த இரு பெண்கள், அங்கு அடுக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் தூக்கி போட்டு உடைத்துள்ளனர். கடையில் ஹிந்து கடவுள்களை ஏன் வைக்கிறீர்கள் என்றும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்ட ஹிந்துக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பஹ்ரைன் போலீசார் சிலைகளை உடைத்த 54 வயது பெண் மீது வழக்கு பதிந்து நோட்டீஸ் அனுப்பினர். அவரும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அப்பெண் மீது, சேதம் விளைவித்தது, மத அடையாளத்தை பகிரமங்கமாக அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டார். மேலும் நீதிமன்றத்தால் அவர் விசாரிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பஹ்ரைன் மன்னரின் ஆலோசகரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான காலித் அல் கலீபா கூறியதாவது: அப்பெண்ணின் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. மத அடையாளங்களை சேதப்படுத்தியது குற்றம். இது எங்கள் நாட்டு மக்களின் இயல்பு கிடையாது. அவர் காட்டிய வெறுப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. பஹ்ரைனில் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்கின்றனர். இவ்வாறு >அவர் கூறினார்.