பழைய இரும்பு கடையில் மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டிருந்த நடப்பு கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள்

Scroll Down To Discover

மயிலாடுதுறையில் பழைய இரும்பு கடையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் மூட்டை மூட்டையாகக் கட்டி குவித்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் முத்துவக்கீல் சாலையில் இயங்கி வரும் பழைய இரும்பு கடையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் 5 டன்னுக்கும் மேலாக பழைய இரும்பு கடையில் விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போது ஆட்சி நிர்வாகமும் கல்வித்துறை நிர்வாகமும் காவல்துறை நிர்வாகமும் விசாரித்து வருகின்றனர். இந்த செயலில் கல்வித் துறையை சார்ந்தவர் ஈடுபட்டிருப்பதாக தெரிய வருகிறது. எனவே மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகத்தை காலத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு வழங்காமல் காசுக்காக பழைய இரும்பு கடையில் தற்பொழுது போடப்பட்டுள்ளது.தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி விலையின்றி வழங்கும் புத்தகங்களைப் பழைய இரும்பு கடையில் மொத்தமாக எடைக்கு விற்பனை செய்த சம்பவம் அதிகாரிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனை செயலை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. உடனடியாக தமிழக அரசாங்கம் உரிய நபர்கள் மீதும் கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மாணவர் சங்கம் நாகை மாவட்ட குழு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்