பழமுதிர் சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அழகர்கோவில் மலைமேல் ஆறாவது படை வீட்டில் வீற்றிருக்கும் முருகன் கோயிலில் கந்த சஷ்டியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை காப்புக் கட்டுடன் விழா தொடங்கியது.

முதல் நாளான இன்று முருகன் வள்ளி தெய்வானையுடன் கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரண்டாவது நாள் விழாவில், காமதேனு வாகனத்திலும், மூன்றாவது நாளில் யாணை வாகனத்திலும், நான்காம் நாள் ஆட்டுக் கிடாய் வாகனத்திலும், ஜந்தாவது நாள் சப்பரத்திலும், ஆறாவது நாள் கோயில் வளாகத்தில் சூரசம்ஹாரமும், ஏழாவது நாள் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

சூரசம்ஹாரம் கோயில் வெளி பிரகாரத்தில் நடைபெறும். பக்தர்கள் முகக் கவசம், சமூக இடைவெளியை விட்டு, கோயில் வெளியே இருந்து தரிசிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாச்சலம், துணை ஆணையர் பொறுப்பு அனிதா மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.