பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் சிறப்பு திட்டம் – ஜல் சக்தி அமைச்சகம்

Scroll Down To Discover

பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் சிறப்பு திட்டம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்க ஜல் சக்தி அமைச்சகம் முடிவெடுத்துள்ளது

பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆசிரமங்களுக்கு ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் ஜல் சக்தி அமைச்சகத்தின் 100-நாள் சிறப்பு திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு தண்ணீர் இணைப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம், சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இலக்கை அடைவதற்கு இன்னும் சிறிது கால அவகாசம் கேட்டிருக்கின்றன.

இத்திட்டத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் நடவடிக்கைகளை தொடர வேண்டிய தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 2021 மார்ச் 31 வரை இதை நீட்டிக்க ஜல் சக்தி அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.கடந்த நூறு நாட்களில், ஆந்திரப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், கோவா, ஹரியானா, தமிழகம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தண்ணீர் இணைப்புகளை வழங்கியுள்ளன. பஞ்சாபில் அனைத்து பள்ளிகளிலும் தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆசிரமங்களுக்கு ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குழாய் மூலம் தண்ணீர் வழங்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மொத்தம் 5.21 லட்சம் பள்ளிகள் மற்றும் 4.71 லட்சம் அங்கன்வாடி மையங்களுக்கு இது வரை தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.