பல்லடம் நால்வர் படுகொலை… முக்கிய குற்றவாளி 2 பேர் காவல்நிலையத்தில் சரண்..!!

Scroll Down To Discover

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு அருகே 2 பெண்கள் உட்பட 4பேர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்பு, இரவு தனது தோட்டத்தில் மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மோகன்ராஜ், ரத்தினாம்பாள், புஷ்பவதி, செந்தில்குமார் ஆகியோர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோகன்ராஜ் வீட்டின் முன்பு குற்றவாளிகள் தகராறு செய்த காட்சிகள் அருகில் உள்ள வீட்டின் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஏற்கெனவே செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி இருவர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகியோர் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் சரணடைந்தனர். வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகியோரை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.