பரம்பரை பரம்பரையாக சிவன் கோவிலை பராமரிக்கும் முஸ்லிம் முதியவர்..!

Scroll Down To Discover

அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே பிரம்மபுத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள சிவன் கோவிலை, முஸ்லிம் முதியவர், மோதிபர் ரஹ்மான்(73) பராமரித்து வருகிறார். கோவிலை சுத்தம் செய்வது முதல், விளக்கு ஏற்றுவது வரை அனைத்து பணிகளையும் அவரே மேற்கொள்கிறார். சிவபெருமானை ‘நானா’ என அன்புடன் அழைக்கும் அவர், மதநல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.

Picture for: Motibar Rahman stands out as a #Muslim looking after a Hindu shrine in Assam state

இதுகுறித்து மோதிபர் ரஹ்மான் கூறியதாவது: எனது மூதாதையர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவபெருமான் கேட்டுக் கொண்டதன்படி, பரம்பரை பரம்பரையாக கோவிலை பராமரிக்கும் பணியை செய்து வருகிறோம். சுமார் 500 ஆண்டுகளாக எனது குடும்பத்தார் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். என் ‘நானா'(சிவன்) தூய்மையை விரும்புபவர் என்பதால் கோவிலை தூய்மையாக வைத்துக் கொள்வேன். எனக்கு பின் இப்பணியை என்மகன்கள் மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.