பயணிகள் ரயில் சேவைகள் முழுவதும் மீண்டும் தொடங்கப்படும் என்ற செய்தி குறித்து ரயில்வே அமைச்சகம் விளக்கம்.!

Scroll Down To Discover

பயணிகள் ரயில் சேவைகள் முழுவதும் மீண்டும் தொடங்கப்படும் என்ற செய்தி குறித்து ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஏப்ரல் முதல், பயணிகள் ரயில் சேவைகள் முழுவதும் மீண்டும் தொடங்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளி வந்துள்ளன.

இது குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றது. இது போன்று, அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் மீண்டும் துவங்குவதற்கான எந்தவிதமான குறிப்பிட்ட தேதியும் வெளியிடப்படவில்லை என்று ரயில்வே அமைச்சகம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

ரயில் சேவைகளின் எண்ணிக்கையை ரயில்வேதுறை படிப்படியாக உயர்த்தி வருகிறது. ஏற்கனவே 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்கி வருகின்றன. ஜனவரி மாதத்தில் மட்டுமே 250-க்கும் மேற்பட்ட ரயில்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. படிப்படியாக கூடுதலான சேவைகள் துவக்கப்படும்.

சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது கருத்துக்களும், பலதரப்பட்ட விஷயங்களும் நினைவில் கொள்ளப்படும். ஊகங்களை தவிர்க்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு முடிவும் எடுக்கப்படும்போது ஊடகத்திற்கும் பொதுமக்களுக்கும் முறையாக அறிவிக்கப்படும்.