அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்களை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர் குடும்பங்கள், வருமான உச்சவரம்பின்றி, முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவர் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 771 அங்கீகார அட்டைகளும், 643 செய்தியாளர் அட்டைகளும் புதுப்பித்து வழங்கப்பட்ட நிலையில், அவர்களை காப்பீட்டு திட்டத்தில் இணைக்குமாறு, செய்தித் துறை கேட்டுக் கொண்டது. அதை ஏற்று, 1,414 பத்திரிகையாளர்களின் குடும்பங்களை, வருமான உச்சவரம்பின்றி, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
Leave your comments here...