பதுக்கிய கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது.!

Scroll Down To Discover

மதுரை அருகே கஞ்சாவை பதுக்கியதாக, ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் பனைபட்டி அருகே, கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சம்பவ இடம் சென்ற போலீசார், அங்கே கஞ்சா பதுக்கி வைத்திருந்த வீரமணி என்பவரை கைது செய்தனர்.

மேற்படி, தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வீரமணியிடம், இருந்து சுமார் 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், மேற்படி நபர் மீது உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, வீரமணியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.