பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள் பணம் வேண்டாம் : இந்து மக்கள் கட்சி

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் திருநகர் 5 வது பேரூந்து நிறுத்தம் அருகில் வந்தேமாதரம் நடன பள்ளி மற்றும் என் மக்கள் சமூக நல அறக்கட்டளையுடன் இணைந்து மதுரை இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மதுரை மாவட்டத் தலைவர் குணா தலைமையிலும் மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையிலும் கொரோனா ஊரடங்கால் பசியால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் கொரோனாவில் இருந்து எப்படி நம்மளை காப்பாற்றி கொள்வது என்ற விழிப்புணர்வை எடுத்து சொன்ன பின்னரே கபசுர குடிநீர் , மாஸ்க் , உணவு பொட்டலம் தண்ணீர் பாட்டில்களும் சமூக இடைவெளி விட்டு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் ,அகில பாரத அனுமன் சேனை மாநில முதன்மை பொதுச் செயலாளர் ஏ.பி. ராமலிங்கம், இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி செயலாளர் குமார் , திருப்பரங்குன்றம் ராக்கெட் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏழைகள் அனைவரும் தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

செய்தி: Ravi Chandran