பக்தர்கள் ஏமாற்றம் : கொரோனா பரவல் – அமர்நாத் யாத்திரை 2வது ஆண்டாக ரத்து.!

Scroll Down To Discover

ஜம்மு – காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில், இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

கடந்த ஆண்டு (2020) கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து ஜூலை 21-ல் துவங்க வேண்டிய அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அமர்நாத் ஆலய வாரியம் அறிவித்தது.


இது தொடர்பாக கவர்னர் அலுவலகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், அமர்நாத் ஆலய வாரிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர், யாத்திரையை ரத்து செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ‘மக்களின் உயிரை பாதுகாப்பது முக்கியம். எனவே, பெரிய அளவில் இந்த ஆண்டு யாத்திரை நடத்துவது நல்லதல்ல. சம்பிரதாயத்திற்காக மட்டுமே யாத்திரை நடைபெறும். ஆனால், அனைத்து பாரம்பரிய மத சடங்குகளும் புனித குகை ஆலயத்தில் செய்யப்படும்’ என கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும், பூஜைகள் ஆன் லைனில் ஒளிபரப்பப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. .