நைஜீரியாவில் கத்தோலிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு – 50 பேர் பலி.. பலர் காயம்..!

Scroll Down To Discover

நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க சர்ச்சில், வழிபாடு நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், 50 பேர் கொல்லப்பட்டனர்; பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள புனித பிரான்சிஸ் கத்தோலிக்க சர்ச்சில், வழிபாடு நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், வெடிகுண்டுகளை வெடிக்க செய்தும் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினார். இதில் குறைந்தது 50 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவத்தை நேரில் பார்த்த அபயோமி என்பவர் கூறுகையில், ‘நான் அந்த வழியாக சென்ற போது சர்ச்சுக்குள் துப்பாக்கிச்சூடு சத்தமும், வெடிச்சத்தமும் கேட்டது.

அப்போது 5 பேர் துப்பாக்கியுடன் இருப்பதை கண்டேன்’ என தெரிவித்துள்ளார். தாக்குதலில், எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை அந்நாட்டு அரசு இன்னும் உறுதியாக தெரிவிக்காத நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.