நேர்த்திக்கடன் : ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலை துண்டித்த போதை ஆசாமி..!

Scroll Down To Discover

ஆந்திரவில் மதுபோதையில் ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலையை வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வலசப்பள்ளி கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று ஊர் எல்லையில் உள்ள கிராம தேவதைக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது வெட்டுவதற்கான ஆடு ஒன்றை 35 வயது இளைஞரான சுரேஷ் பிடித்துக் கொண்டிருந்தார்.

ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்பவர் நன்றாக மது அருந்தி முழு போதையில் இருந்தார். நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்ற இந்த பலிகொடுக்கும் சம்பவத்தின்போது போதையில் இருந்த சலபதி ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை ஆடு வெட்டும் கத்தியால் ஓங்கி வெட்டினார். இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து துடித்தார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக சுரேசை மீட்டு மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மதனபள்ளி போலீசார் ஆடு என்று நினைத்து சுரேஷ் தலையை வெட்டிய சலபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.