நெல்லூர் அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 55 பேர் கைது ..!

Scroll Down To Discover

ஆந்திர மாநிலம் புத்தானம் அருகே உள்ள, சென்னை – நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது லாரியில் இருந்தவர்கள் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார், செம்மரக் கட்டைகளை கடத்த முயன்றதை கண்டறிந்தனர்.

இதையடுத்து வாகனங்களில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 55 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என 58 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 45 செம்மரக் கட்டைகள், கோடாரிகள், வாகனங்கள் மற்றும் ரூ.75 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், செம்மரக் கட்டைகளை சென்னைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.