நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Scroll Down To Discover

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அதற்கு முன்பு தலைமை நீதிபதி பதவி வகித்தவர்களை விமர்சித்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில்,, இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. பிரசாந்த் பூஷணுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த வாதம் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.