நீட் தேர்வை எட்டு மாதங்களில் ரத்து செய்ய முடியவில்லை என்றால் ஸ்டாலின் அரசியலை விட்டு விலக தயாரா? சரமாரியாக கேள்வி எழுப்பிய ஹெச். ராஜா.!

Scroll Down To Discover

சிவகங்கையில் பாரதப் பிரதமர் மோடியின் 70 வது பிறந்தநாள் விழா மாநில பொதுச் செயலாளர் எச்.ராஜா தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக பாஜக கொடியை ஏற்றி பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நீட் தேர்வு என்பது பாஜக அரசால் கொண்டுவரப்பட்டது அல்ல. திமுக – காங்கிரஸ் கூட்டணி காலத்தில் உருவாக்கப்பட்டது. இத்தேர்வு நடைபெற்ற போது எல்லாம் திமுக ஆட்சியில் பங்கு பெற்று வாய்மூடி மௌனம் காத்து வந்தது இந்நிலையில், செல்வி ஜெயலலிதா முதலமைச்சர் பதவிக்கு வந்தவுடன் மாணவர்களை தயார்படுத்த வேண்டும் எனவே ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டதின் பேரில் ஓர் ஆண்டு விளக்கு நீட் தேர்வுக்கு அளிக்கப்பட்டது.

அதற்கும் அன்றைய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் மனைவி வழக்கறிஞர் நளினி உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு நடத்திய ஆக வேண்டுமென வாதாடியவர்! இன்று நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர் திமுக அறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே முடியாததை முடியும் என்று சொல்வது வழக்கமாகி உள்ளது. ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவதே லட்சியம் என கூறிவந்த அன்றைய அரசு கொடுக்க முடியவில்லை என்றால் என்னை முச்சந்தியில் வைத்து அடியுங்கள் என்று கூறினார்.

ஆனால் முடியவில்லை அதேபோல் எட்டு மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்று ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். முடியவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயாரா? இவர் எக்காலத்திலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாது! முதலமைச்சராக முடியாது!! அவருடைய ஜாதகம் அப்படி!!! மாணவர்கள் நான்கு முறை நீட் தேர்வை எழுதலாம். எனவே அச்சப்படத் தேவையில்லை. நீட் தேர்வின் போது மதச்சார்பின்மைக்கு புறம்பாக நடந்து கொள்ளும் அதிகாரிகள் மீது ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.