நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவனுக்கு அமைச்சர் தென்னரசு வாழ்த்து..!

Scroll Down To Discover

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அரசு பள்ளியில் படித்த மாணவன் சாலை முத்து நீட் தேர்வில் 364 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் முதலிடத்தைப் பெற்றார்.

7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம் பெற்ற மாணவர் சாலைமுத்து தமிழக தொழில்துறை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வாழ்த்து பெற்றார். மாணவருடன் பள்ளி தலைமையாசிரியை பாரதி மற்றும் உதவித் தலைமையாசிரியர்கள் சந்திரசேகரன், பிரபாகரன் ஆசிரியர்கள் சுரேஷ்குமார், ஆனந்த கேசவன், ராம்குமார், இம்மானுவேல், இளங்கோ, காமாட்சி ராஜா ஆகியோரும் உடனிருந்தனர்.