நிலையான வளர்ச்சிக்கு தரமான உள்கட்டமைப்பு அவசியம் – ‘கதிசக்தி’ திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் உரை.!

Scroll Down To Discover

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் ‘கதி சக்தி’ திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்தை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்துள்ளோம். தேசிய மாஸ்டர் பிளான் ஆனது, 21ம் நூற்றாண்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு ‘கதி சக்தி’ அளிப்பதுடன், இந்த திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு பெற உதவும்.


முந்தைய காலங்களில் திட்டங்கள் நடைபெறுகிறது என பதாகைகளை பல இடங்களில் பார்க்க முடியும். திட்டங்கள் துவக்கப்பட்டாலும், அது நிறைவு பெறாது.

ஆனால், அதனை நாங்கள் மாற்றி உள்ளோம். நாங்கள் திட்டமிட்டு, வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். வளர்ச்சிக்கு தடையாக உள்ள விஷயங்கள் அகற்றப்படும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் திட்டப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எந்த கட்சியும் முன்னுரிமை அளிப்பது கிடையாது. அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றதில்லை. ஆனால், நிலையான வளர்ச்சிக்கு தரமான உள்கட்டமைப்பு அவசியம். இதன் மூலம் பொருளாதாரம் கட்டமைக்கப்படுவதுடன், வேலைவாய்ப்பு பெருகுகிறது. இவ்வாறு மோடி பேசினார்.