நிறுத்திவைக்கப்பட்ட ஜாமின் – உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் முறையீடு..!

Scroll Down To Discover

ஜாமின் நிறுத்திவைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் முறையீடு செய்துள்ளார்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட் கடந்த 20-ம் தேதி ஜாமின் வழங்கிய நிலையில், அதனை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த வழக்கில், டில்லி ஐகோர்ட் ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் நாளை( 24.06.2024) சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளார்.