இந்தியாவுடன் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்களின் பெயர் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து வென்றுள்ளநிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் உற்சாகமாக களமிறங்குகிறது. இந்தியாவும் இந்தப் போட்டியில் வெல்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான 20 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து இந்த 15 பேர் கொண்ட அணி உறுதி செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் காயத்தில் இருந்து குணமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணியில், இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ் படேலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்பின்னரான அஜாஸ் படேலுக்கு இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இறுதிப் போட்டிக்கான அணியிலும் அவர் இடம் பிடித்திருக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில், நியூசிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடிய போதும், அவர் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வீரர்கள் பட்டியல்
கோலி, ரோகித், சுப்மன் கில், புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷப் பண்ட், சாஹா, அஸ்வின், ஜடேஜா, பும்ரா, இசாந்த் சர்மா, சமி, உமேஷ் யாதவ், சிராஜ்
https://twitter.com/BCCI/status/1404785767700996096?s=20
நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல்:
https://twitter.com/ICC/status/1404655391472902148?s=20
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டல், டிரெண்ட் போல்ட், டேவன் கான்வே, கிராண்ட்ஹோம், மேட் ஹென்ரி, ஜேமிசன், டாம் லேதம், ஹென்ரி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வாட்லிங், வில் யங்.
Leave your comments here...