நாளை முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை.!

Scroll Down To Discover

தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மீண்டும் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரநா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு ரூபாய் 4 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இதனை பெறுவதற்காக நியாய விலை கடைகளுக்கு மக்கள் வரும்போது கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், கொரோனா பரவலை தடுப்பதற்காகவும் கைரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.