“நாரி சக்தி புரஸ்கர்” விருது பெற்ற 103 வயது சாதனை பெண் மான் கவுரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி – வைரலானது புகைப்படம்..!!

Scroll Down To Discover

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தில் பல்வேறு துறைகளில் சாதிக்கும் பெண்களுக்கு அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் தேசிய விருதான ‘நாரி சக்தி புரஸ்கர்’ விருது வழங்கும் விழா டில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெறும். அந்தவகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த விருது வழங்கும் விழா நேற்று மார்ச் 8 நடைபெற்றது.
https://twitter.com/rashtrapatibhvn/status/1236573653258530816?s=20
இதில், தடகள விளையாட்டில் 30க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற மன்கவுர், படிப்பில் அசத்திய மூதாட்டிகளான பகீரதி அம்மாள், கார்த்தியாயிணி உள்ளிட்ட 15 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.
https://twitter.com/rashtrapatibhvn/status/1236533781730738176?s=20
இந்திய விமானப்படையில் முதன்முதலாக போர் விமானங்களை இயக்கிய பெண் விமானிகளான மோகனா ஜிட்டர்வால், அவனி சதுர்வேதி, பாவனா காந்த் ஆகியோர் உட்பட மொத்தம் 15 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதில் உலகெங்கிலும் தடகள விளையாட்டில் 30க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்ற, சண்டிகரை சேர்ந்த மன்கவுர் என்பவரும் இந்த விருதினை பெற்றார்.

சமூக அடிப்படையிலான அமைப்பின் மூலம் பழங்குடி பெண்கள், விதவைகளின் வளர்ச்சிக்காக பணியாற்றிய தெலுங்கானாவை சேர்ந்த பதலா பூதேவி, ஜம்மு-காஷ்மீரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புதுப்பிக்க மேற்கொண்ட முயற்சிக்காக, ஸ்ரீநகரை சேர்ந்த அர்பா ஜான், படிப்பில் அசத்தி பிரதமர் மோடியிடம் பாராட்டை பெற்ற கேரளாவை சேர்ந்த மூதாட்டிகள் பகீரதி அம்மாள், கார்த்தியாயிணி அம்மாள் உட்பட 15 பெண்களுக்கு ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். இந்த விழாவில் ஜனாதிபதியின் மனைவி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமர் மோடியுடனான உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களுக்கு மத்தியில் மோடி பேசியதாவது: நீங்கள் உங்கள் வேலையை தொடங்கியபோது, அதை ஒரு பணியாகவோ, மதிப்புமிக்க ஒன்றிற்காகவோ செய்திருக்க கூடும். அது நிச்சயமாக வெகுமதிக்காக இருந்திருக்காது. ஆனால், இன்று நீங்கள் மற்றவர்களுக்கு உத்வேகமாகி உள்ளீர்கள் என கூறினார்.
https://twitter.com/ANI/status/1236624832629891072?s=20
இந்த நிகழ்ச்சியில், தடகளத்தி்ல சாதனை புரிந்ததற்காக ‘நாரி சக்தி புரஸ்கர்’ விருது பெற்ற மான் கவுரிடம், பிரதமர் மோடி ஆசி பெற்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது