நாட்டின் தலைசிறந்த கல்லூரிகள் பட்டியல் – தமிழகத்தின் 3 கல்லூரிகள் தேர்வு..!

Scroll Down To Discover

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில், சென்னையின் மாநில கல்லூரி தேசிய அளவில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 4வது இடமும், சென்னை லயோலா கல்லூரி 7வது இடமும் பிடித்துள்ளன

தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்.ஐ.ஆர்.எப். அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது.

சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியல்:
* டில்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம்
* டில்லி ஹிந்து காலேஜ் 2வது இடம்
* சென்னை மாநில கல்லூரி 3வது இடம்*கோவை பி.எஸ்.ஜி பெண்கள் கல்லூரி 4வது இடம்
* சென்னை லயோலா கல்லூரி 7வது இடம்

சிறந்த பல்கலைக்கழகங்கள்
பெங்களூரு ஐ.ஐ.எஸ் முதல் இடம்
டில்லி ஜேஎன்யு 2வது இடம்
டில்லி ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் 3வது இடம்
அமிர்தா விஷ்வா வித்யாபீதம் , கோவை 7வது இடம்
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் 8வது இடம்

சிறந்த இன்ஜினியரிங் கல்லூரிகள்
சிறந்த இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களின் வரிசையில் ஐஐடி மெட்ராஸ் 8வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
திருச்சி என்.ஐ.டி., 9வது இடத்தில் உள்ளது.

சிறந்த மருத்துவக் கல்வி நிறுவனங்கள்
டில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடத்தையும்,
சண்டிகரில் உள்ள பிக்மர் மருத்துவமனை இரண்டாம் இடத்தினையும்,
வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

சிறந்த வேளாண் கல்வி நிறுவனங்களின் பட்டியலில்,
டில்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் முதலிடத்தையும்,
தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.