கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு, கடந்த 14ம் தேதி முதல் அமலில் உள்ளது. கொரோனா தொற்று அறிகுறிகளுடன் இருக்கும் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கான மக்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இந்த நிலையில் மக்களுக்கு உதவும் விதமாக ரயில் பெட்டிகளை மருத்துவ வசதிகள் அடங்கிய வார்டுகளாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
https://twitter.com/PiyushGoyal/status/1243865074197905408?s=20
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, இதனை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை மத்திய அரசு செய்துவருகிறது.இதன் காரணமாக இயக்கப்படாமல் இருக்கும் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றியமைத்துள்ளனர். இதன் ஒருபகுதியாக ரயில்களை தனிமை வார்டுகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது.ரயில் பெட்டியில் உள்ள ஒவ்வொரு கேபினும், ஒருவரை உள்ளடக்கும் வகையில் தனி வார்டுகளாக மாற்றப்படுகிறது.
ஒரு பெட்டியில் 9 கேபின்கள் உள்ளன. ஒரு பெட்டியில் இருக்கும் 4 கழிவறைகளில் ஒன்றை குளியலறையாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது.’நாடு முழுவதும், 20 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாராகி வருகின்றன. இவற்றின் மூலம், 3.2 லட்சம் படுக்கை வசதி ஏற்படுத்த முடியும்’ என, ரயில்வே கூறியுள்ளது.
Leave your comments here...