தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பயணத்தின் போதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் வகையில் பஸ், ரயில், விமானநிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலை கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் சொட்டு மருந்து முகாம் தயார் நிலையில் உள்ளது.போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உட்பட சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் காலை 7 மணிக்கு துவங்கிய போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தின் 5 வயதுக்குட்பட்ட சுமார் 70.20 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் 6.84 லட்சம் பேர் உள்ளனர். இதற்காக அங்கு மட்டும் 1,644 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 6,700 பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் 1,705 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
Leave your comments here...