நாடக கலைஞர்களுக்கும் சமூக ஆர்வலரின் நிவாரண உதவி.!

Scroll Down To Discover

மதுரையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார், மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன்.

இவர், கடந்த 15 மாதங்களாக, மதுரை நகரில் பல்வேறு இடங்களுக்கு சென்று, கலைக்கூத்தாடி முதல் நாடக கலைஞர் வரை உள்ள நலிந்த மக்களுக்கு பொருட்களாகவும், பண உதவியும் தொடர்ந்து செய்து வருகிறார்.இவருக்கு உறுதுணையாக இருக்கும் இவரது நண்பர்களான, குணா அலி, நாகேந்திரன் ஆகியோர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

இவர், மதுரை அண்ணாநகர், யாகப்பா நகர், வண்டியூர், மதிச்சியம், ஐராவதநல்லூர், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், கொரோனா காலத்தில் தீவிரமாக துயர் துடைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவரின் நோக்கமானது, அரிசி, காய்கறிகள், ஆடைகள், உணவுப் பொருட்கள், எளியோருக்கு முடிந்த நிதியுதவிகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறாராம். இவரது சேவையை, மதுரை அண்ணாநகர் பகுதிகளில் பலரும் பாராட்டியுள்ளனர்.
செய்தி: Ravi Chandran